
எங்களைப் பற்றி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் முத்தமிழ் மன்றம், 1998-ம் ஆண்டு கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களால் தமிழ் மன்றம் என்னும் பெயரில் துவங்கிவைக்கப்பட்டு, பின்பு 2005-ம் ஆண்டு முத்தமிழ் மன்றம் என்று பெயர் மாற்றம் பெற்று சிறப்பாக செயல்பெற்று வருகிறது.
நோக்கம்
-
தமிழ்த்தொண்டு ஆற்றல்.
-
நற்றமிழ்மொழியின் மறைகளையும் சிறப்பையும் மாணாக்கர்களிடம் கொண்டு சேர்த்தல்.
-
கலை இலக்கியப் போட்டிகளின் மூலம் மாணாக்கர்களின் தனித்தமிழ்த் திறமை மற்றும் உயர்ந்த சிந்தனைகளை வெளிக்கொணர்தல் .
-
பொறியியல் / தொழிற்நுட்ப மாணாக்கர்களின் அறிவியல் ஆய்வுகளை தாய்த்தமிழிலும் படைக்க ஊக்குவித்தல்.
-
தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை ,கல்லூரியில் விழாக்கள் மூலம் மாணக்கர்களிடம் பறைசாற்றுதல்.
ஆக்கம்
-
தனித்தமிழ் மொழிவள மேம்பாடு.
-
மாணாக்கர் செயல்திறன் மற்றும் சிந்தனை வளப்பெருக்கம்.
-
பலதரப்பட்ட நிகழ்வு ஒருங்கிணைப்புகள் மூலம்,தலைமைப்பண்பு வெளிப்பாடு.
-
எழுத்து, பேச்சு , ஓவியம், இசை , பாடல், நடனம், நாடகம், தமிழாய்வு ஆகிய முதன்மைக் கலைத் துறைகளில் நமது மாணாக்கர்களின் படைப்பிற்கும் பங்களிப்பிற்கும் அங்கீகாரம்.
நிகழ்வுகள் தொகுப்பு

















